BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!

Updated: Sun, Nov 17 2024 18:23 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியா அணியானது தங்கள் அணிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் ரெட்டி, பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் விளையாடும் பதினொன்றில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி விளையாடுவார் என்றும், இந்த சுற்றுப்பயணத்தில் ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இந்திய அணியில் இல்லாத காரணத்தால், அணியின் வேகப்பந்து வீச்சாளராக நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதீஷ் ரெட்டி முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 23 போட்டிகளில் 39 இன்னிங்ஸ்களில் விளையாடி 779 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களும் அடங்கும். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் இந்திய டி20 அணிக்காக அறிமுகமான நிதீஷ் ரெட்டி, தற்சமயம் டெஸ்ட் அணியிலும் அறிமுகமாவது ஏறத்தாழு உறுதியாகியுள்ளது.

 

மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளதன் காரணமாக, இப்போட்டியில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இதனால் எதிவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மெட்செல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை