புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!

Updated: Tue, Jun 21 2022 14:24 IST
No BATTING session for Cheteshwar Pujara, coach Vikram Rathour takes slip (Image Source: Google)

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடராக ஏற்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணி மட்டும் அறிவிக்கப்பட்டு, அனைத்து வீரர்களும் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டனர். அஸ்வின் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக செல்லவில்லை. அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சட்டீஸ்வர் புஜாரா ஒருவருக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கொடுக்க முடியாது என மறுக்கப்பட்டுள்ளது. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

இந்திய அணியில் சொதப்பி வந்த புஜாரா, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்தின் சக்ஸஸ் தொடரில் விளையாடி வந்தார். அதில் ஒவ்வொரு போட்டியிலும் ரன் மழை பொழிந்த அவர், சிறப்பான ஃபார்மில் இருந்ததன் காரணமாக மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த நாட்களில் நிறைய போட்டிகள் இங்கேயே ஆடியிருப்பதால், பேட்டிங் பயிற்சி தற்போது தேவையில்லை எனத் தெரிகிறது.

இதற்கு மாறாக புஜாராவுக்கு ஃபீல்டிங் பயிற்சிகள் மிக கடுமையாக தரப்பட்டு வருகிறது. ஸ்லிப் திசைகளில் நிற்கக்கூடிய டாப் ஃபீல்டர்களில் புஜாராவும் ஒருவர். இங்கிலாந்து களத்தில் அது மிக முக்கியமான ஒன்று என்பதால், ஃபீல்டிங் பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை