நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை - விராட் கோலி!

Updated: Mon, Jan 16 2023 11:48 IST
No 'desperation' for 'relaxed' Kohli in yet another clinical innings (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இப்போட்டியில், 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 8 சிக்ஸர்களை விளாசினார். 13 பவுண்டரிகளையும் அவர் அடித்தார். சொந்த மண்ணில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்த்தனேவைப்பின்னுக்கு தள்ளி விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். 

இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய விராட் கோலி, “நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை. இதெல்லாம் நம் வெற்றிக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் பரிசாக தான் நான் இப்போது பார்க்கிறேன். என்னுடைய மனநிலை எல்லாம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். ஆடுகளத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். இது மட்டும் தான் தற்போது என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இப்படி செய்தால் நல்ல வித்தியாசம் ஏற்படுவதை உணர்கிறேன். நான் எதற்காக விளையாட வேண்டும் என்று சரியான காரணம் எனக்கு தெரியும். அணிக்காக எந்த அளவுக்கு என்னால் வெற்றி பெற்று தர முடியுமோ அதுவரை எனக்கு மகிழ்ச்சி தான். முன்பெல்லாம் என்னால் முடியவில்லை என்றால் கூட, கடுமையாக மனசை போட்டு அழுத்திக்கொண்டு அதை முடிக்க பார்ப்பேன். இப்போதெல்லாம் அப்படி நினைப்பதில்லை. அன்றைய நாள் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்கிறேன். 

மனதிற்கும் உடலுக்கும் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். இப்போது எல்லாம் மனதளவிலும் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன்ம் இந்த மன நிலையில் நான் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முகமது சமி போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் சிராஜும் தற்போது தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பும்ராவும் காயத்திலிருந்து விடுபட்டு அணிக்கு திரும்புவார். 

இதனால் எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பவர் பிளேவில் எங்களுடைய வீரர்கள் அதிக விக்கெட்களை எடுத்து விடுகிறார்கள். இதற்கு முன்னால் இப்படி நடக்கவில்லை. முகமது சிராஜ் அனைத்து பேட்ஸ்மேன்களையும் யோசிக்க வைக்கிறார். உலகக்கோப்பை நடக்கும் நிலையில் இது இந்திய அணிக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை