ஐசிசி ஒருநாள் அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணியைத் தேர்வு செய்து இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி நேற்று வெளியிட்ட 2021-ம் ஆண்டுக்கான டி20 அணியிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
மேலும் இந்த ஒருநாள் அணியில் பாகிஸ்தான், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணி வீரர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி 2021: பால் ஸ்டிர்லிங், ஜென்மான் மாலன், பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், வெண்டர் டுசென், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிக்கூர் ரஹீம், வனிந்து ஹசரங்கா, சிமி சிங், துஷ்மந்தா சமீரா.