மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!

Updated: Tue, Dec 31 2024 13:51 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று முடிந்தது. 

சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய் அணியின் மிட்செல் மார்ஷ் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய நிலையில் அதன்பின் அவர் பந்துவீசவில்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படாமல் மாறாக டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே உள்ளிட்டோர் பந்துவீசினர். இதனால் மிட்செல் மார்ஷ் காயத்தி சந்தித்திருக்க கூடும் என்றும், சிட்னி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், “அவருக்கு காயம் ஏதும் இல்லை என்பதால், அதுகுறித்து எந்த கவலையும் இல்லை. மக்கள் அதைப் பற்றி அதிகமாக யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அடிக்கடி அவர் பந்துவீச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும் அவரது வேகம் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் உள்ளது. அதனால் நிச்சயம் காயம் குறித்து எந்த கவலையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை