எங்களுடைய தவறை திருத்திக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம் - விராட் கோலி

Updated: Sat, Aug 28 2021 19:35 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. கேப்டன் ரூட் 121 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தின் போது 278 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஓவர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் உள்ளது. 

இந்நிலையில், ஆட்ட முடிவு பற்றி பேசிய விராட் கோலி“டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது தவறில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாகத் தென்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது நிலைமை மாறிப் போனது. நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. அணிகள் எப்படி விளையாடியதோ அப்படித்தான் இந்த ஆட்டத்தின் முடிவு வந்துள்ளது. இங்கிலாந்து அணி மீண்டு வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தால் தான் கீழ் நடு வரிசை வீரர்கள் மேலும் ரன்கள் எடுக்க முடியும். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

முதல் இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்டிங் குழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் மீண்டு வந்தோம். அடுத்த டெஸ்டில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வோம். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். எங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்வதில் நாங்கள் பெருமை கொள்வோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை