ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 4-5 மாதங்கள் உள்ளன - எம் எஸ் தோனி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 57 ரன்களைச் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களைக் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 41 ரன்களையும், ஆர்ஷத் கான் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 147 ரன்களில் ஆல் அவுட்டானது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத், அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் நிறைவுசெய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பின் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி, “நான் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 4-5 மாதங்கள் உள்ளன, அதனால் அவசரமில்லை. ஏனெனில் மீண்டும் இத்தொடரில் விளையாட நான் எனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நான் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் செயல்திறனுக்காக ஓய்வு பெறத் தொடங்கினால், அவர்களில் சிலர் 22 வயதில் ஓய்வு பெறுவார்கள்.
Also Read: LIVE Cricket Score
உங்களுக்கு எவ்வளவு பசி இருக்கிறது, எவ்வளவு உடல் தகுதி இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். அணிக்காக நீங்கள் எவ்வளவு பங்களிக்க முடியும். அணிக்குத் தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், எனக்கு போதுமான நேரம் இருக்கிறது. அதனால் நான் இத்தொடருடன் முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை, திரும்பி வருகிறேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு நேரத்தின் ஆடம்பரம் இருக்கிறது. அதைப் பற்றி யோசித்துவிட்டு பின்னர் முடிவு செய்வேன்” என்று தெரிவித்துளார்.