SL vs IND: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலாகினார் நுவான் துஷாரா!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை டி20 அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகினர். இலங்கை அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் துஷ்மந்தா சமீரா 55 டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், நுவான் துஷாரா 11 டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்க, குசல் பெரேரா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலாகே, மஹீஸ் தீக்ஷன, சமிந்து விக்ரமசிங்க, மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா, பினுர ஃபெர்னாண்டோ.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்தியா vs இலங்கை அட்டவணை
- ஜூலை 27- முதல் டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- ஜூலை 28- இரண்டாவது டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- ஜூலை 30- மூன்றாவது டி20 போட்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்