நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 94 ரன்களைச் சேர்த்த கையொடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Advertisement

பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஹசன் நவாஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 105 ரன்களைச் சேர்த்தார்.

அவருடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சல்மான் அலி ஆகாவும் அரைசதம் கடந்ததுடன், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 16 ஓவர்களிலேயே 205 ரன்கள் என்ற இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், “இந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றமளிக்கிறது. இப்போட்டியில் பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் அபாரமாக செயல்பட்டதுடன், அவர் நம்பமுடியாத வீரராக இருந்துள்ளார். அவரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக எங்களால் இந்த இலக்கை பாதுகாக்க முடியவில்லை. அதில் நாங்கள் ஏற்றமடைகிறோம். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்த போட்டியில் பேட்டிங்கின் போது நாங்கள் 20 ஓவர்களை முழுமையாக விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் 20 ஓவர்களை முழுமையாக விளையாடதது குற்றமாகும். அதனால் நீங்கள் உங்களை ஒழுங்கமைக்க வேண்டும், நிலைமைகள் மாறுகின்றன, நீங்கள் அதைச் சமாளிக்க வேண்டியது அவசியமாகும்” என்ரு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News