NZ vs ENG, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்; கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து அணியில் பெரும் மாற்றம்!

Updated: Thu, Jun 10 2021 15:13 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டி வெற்றியாளர் இன்றி முடிவடைந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 10) பர்மிங்ஹாமில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். 

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

அதேசமயம் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், போட்டி நாளான இன்றைய தினம் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங்கும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பு டாம் லேதமிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் , வில் யங் , டேரில் மிட்செல், அஜாஸ் படேல் ஆகியோர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து (விளையாடும் லெவன்): ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, ஜாக் கிரௌலி, ஜோ ரூட் (கே), ஒல்லி போப், டேனியல் லாரன்ஸ், ஜேம்ஸ் பிரேசி, ஒல்லி ஸ்டோன், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து (விளையாடும் லெவன்): டாம் லாதம் (கே), டெவன் கான்வே, வில் யங், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளண்டெல் , டேரில் மிட்செல், நீல் வாக்னர், மேட் ஹென்றி, அஜாஸ் படேல், ட்ரெண்ட் போல்ட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை