கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 133 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எர்வீ 108 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

Advertisement

அதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் 60, காலின் டி கிராண்ட்ஹோம் 120 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா 5 விக்கெட்டுகளையும் ஜான்சென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 136 ரன்களும், ரபாடா 47 ரன்களும் எடுத்தார்கள். இதனால் 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 426 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணி 4-ம் நாள் முடிவில் 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கான்வே 60 ரன்களுடனும் டாம் பிளெண்டல் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். ரபாடா, மஹாராஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

2ஆவது டெஸ்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்குக் கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 332 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் கடைசி நாளில் இந்த டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்வதற்கான வாய்ப்புகள் தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகமாக உள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News