ஆஷஸ் தொடர்: காயம் காரணமாக ஒல்லி ராபின்சன் விலகல்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஹாசீப் ஹமீத், ஸாக் க்ரௌலி, டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வுட், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.