ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகிய மார்க் வுட்டிற்கு மாற்றாக ஓல்லி ஸ்டோன் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரைத்தவிர, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இந்த டெஸ்டிற்கான பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது குறித்து பேசியுள்ள ஒல்லி ஸ்டோன், “இது மிகவும் பயமாக இருக்கிறது. ஏனெனில் மார்க் வுட் பந்துவீசிய விதம் மற்றும் அவரது வேகம் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது.
அதனால் நன் எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பில் அவரது வேகத்தை தொட முயற்சிப்பேன் என்று நம்புகிறேன். அவர் உலகிலேயே அதிவேகமானவர்களுடன் இருக்கிறார், அதனால் நான் அதற்குப் பொருந்துகிறேனா என்று எனக்குத் தெரியவில்லை - ஆனால் நான் என்னால் முடிந்தவற்றை நிச்சயம் செய்வேன். என்னிடம் முழு உடற்தகுதி இருக்கும் வரை நான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.