ஓமனில் நான்கு அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஓமன், அயர்லாந்து, நேபாள், ஐக்கிய அரபு அணிகள் விளையாடுகின்றன.

Advertisement

இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஓமன் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் கான் 57 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர், சிமி சிங் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு பால் காலிங்வுட் - ஆண்ட்ரூ பால்பிர்னி  இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 17.1 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதில் இறுதிவரை களத்திலிருந்து 75 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News