இதுதான் எங்களுடைய டெம்ப்ளேட்டாக இருக்கும் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Wed, Apr 09 2025 12:06 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பிரியான்ஷ் ஆர்யா சதமடித்ததுடன் 103 ரன்களையும், ஷஷாங்க் சிங் 52 ரன்களையும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 69 ரன்களையும், ஷிவம் தூபே 42 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையாடிய எம் எஸ் தோனி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, சிஎஸ்கே அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்,  “நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் இதுதான் எங்களுடைய டெம்ப்ளேட்டாக இருக்கும். எங்களிடம் இருக்கும் வலுவான பந்து வீச்சாளர்களும், பிரியான்ஷ் ஆர்யா விளையாடிய விதமும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. கடந்த ஆட்டத்தில் நான் அவருடன் பேசியபோது, ​​ஜோஃப்ராவை எதிர்கொள்வதில் அவர் சற்று சிரமத்தை எதிர்கொண்டார். ஆனல் இன்று அவர் தனது உள்ளுணர்வை ஆதரித்து சுதந்திரமாக விளையாடினார். 

அவர் விளையாடியது போல் அணியில் உள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்ல இதுவும் ஒன்று. மேலும் இந்த ஆட்டத்தில் நாங்கள் யுஸ்வேந்திர சஹாலை அதிகம் பயன்படுத்தாதற்கு காரணம் உண்டு. ஏனெனில் மிடில் ஓவர்களின் போது களத்தில் ஷிவம் தூபே மற்றும் டெவான் கான்வே இருவரும் இருந்தானர். மேலும் சஹாலுக்கு எதிராக அவர்கள் அதிரடியாக விளையாடும் முடிவில் இருப்பார்கள் என்று தெரியும். 

Also Read: Funding To Save Test Cricket

அதனால் நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வதே சிறந்ததாக இருக்கும் என்று நினைத்தோம். ஏனெனில் தூபேவுக்கு எதிராக நான்கள் வேகப்பந்து வீச்சை விரும்பினோம். இறுதியில் அது எங்களுக்கு பலனளித்தது. நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை, பதட்டங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. அதனால் நாங்கள் திரும்பிச் சென்று வீரர்களுக்கு கேட்சிங் அமர்வுகளைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை