ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம் - கேன் வில்லியம்சன்

Updated: Tue, Jun 29 2021 12:15 IST
One Off Game Never Tells Whole Picture, India Is Truly A Great Side: Kane Williamson (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 

தொடர் மழை காரணமாக ரிசர்வ் டே வரை சென்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 

இப்போட்டியில் இந்திய அணியின் தேர்வு, வீரர்களின் ஃபார்ம், விராட் கோலியின் கேப்டன்சி என பல குற்றச்சாட்டுகளை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வில்லியம்சன்,“விளையாட்டில் நீங்கள் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடும் போது அது உங்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. ஒரே ஒரு போட்டியை வைத்து நீங்கள் யாரையும் மதிப்பிட முடியாது. 

எங்களுக்கு தெரியும் இந்தியா மிகவும் வலிமையான அணிகளில் ஒன்று. அவர்கள் இந்த விளையாட்டின் மிகவும் மதிப்பு மிக்க அணி. அதனால் இப்போட்டியை வைத்து அவர்களை மதிப்பிடுவது சரியல்ல. 

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறேன். அதுவும் இந்தியா போன்ற ஒரு வல்லமை மிக்க ஒரு அணியை வீழ்த்தி, இக்கோப்பையை வென்றிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை