ராபின் உத்தப்பா கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். முன்னதாக சேலஞ்சர்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பி அணிக்காக அவர் விளையாடிய விதம் தேர்வு குழு உறுப்பினர்களை வெகுவாக ஈர்த்தது. இதனை தொடர்ந்தே அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 

Advertisement

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உத்தப்பா தற்போது ஐபில் -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன உத்தப்பாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெங்களூருவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான ஷீதால் கவுதம் என்பவரை ராபின் உத்தப்பா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் (நீல் நோலன் உத்தப்பா) இருக்கிறார். இந்நிலையில், தங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக ராபின் உத்தப்பா - ஷீதால் கவுதம் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.

மேலும், தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் உத்தப்பா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராபின் உத்தப்பா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நிறைவான இதயத்துடன், எங்களது வாழ்க்கையில் எங்கள் புதிய தேவதையை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். டிரினிட்டி தியா உத்தப்பாவை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம். உலகிற்கு வர எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கும், உன் பெற்றோராகவும் உனது சகோதரராகவும் இருக்க எங்களை ஆசீர்வதித்ததற்காக நாங்கள் உனக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா, தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, அவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News