உலகின் சிறந்த ஃபினீஷராக திகழ வேண்டும் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!

Updated: Mon, Sep 20 2021 15:39 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ். இவர் தற்போது அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகியிருந்தார். இதனால் அவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஸ்டொய்னிஸ் விளையாடவுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், அடுத்த சில வருடங்களில் உலகின் சிறந்த ஃபினீஷராக திகழவேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பேசிய அவர், “எனது அடுத்த இலக்கானது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நான் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த ஃபினீஷராக மட்டுமல்லாமல், உலகின் சிறந்த ஃபினீஷ்ராகவும் இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை