Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Marcus stoinis

ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
Image Source: Google

ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!

By Bharathi Kannan April 07, 2024 • 23:13 PM View: 79

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ல்க்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய குயின்டன் டி காக் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் கேஎல் ரகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.பின்னர் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Related Cricket News on Marcus stoinis