நியூசிலாந்து தொடர் ரத்தானது ஒரு சர்வதேச சதி - பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு காரணங்களினால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இத்தொடரை ரத்துசெய்வதாக அறிவித்தது.
மேலும் தங்கள் நாட்டு வீரர்களை பாதுகாப்பாக நாடு திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்யும் நோக்கில் ஆலோசனையில் ஈடபடத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு ஒரு சர்வதேச சதி என பாகிஸ்தான் அமைச்சர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் - நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்காக நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய நியூசிலாந்து ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளது. மேலும் இதுவொரு சர்வதேச சதி” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.