ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங், டாம் லேதம் சதங்க்ளையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டாம் லாதம் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்களையும், வில் யங் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் 61 ரன்களைச் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகில் 6, முகமது ரிஸ்வான் 3, ஃபகர் ஸமான் 22 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

ஒருப்பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்து 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் குஷ்தில் ஷா 69 ரன்களையும், சல்மான் ஆகா 42 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர், “நாங்கள் இப்போட்டியில் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது ஆனால் நடுபகுதியில் வில் யங் மற்றும் டாம் லேதம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கிளென் பிலீப்ஸும் அபாரமாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். முதலில் நாங்கள் 260 ரன்களை தான் இலக்காக கொண்டிருந்தோம். ஆனால் டெத் ஓவர்களில் எங்களால் அதிக ரன்களை பெற முடிந்ததில் மகிழ்ச்சி.

முதல் இன்னிங்ஸில் நாங்கள் பெற்ற ஸ்கோருக்கு பிறகு, முதல் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம். அதன்பின் எங்கள் பந்து வீச்சாளர்கள் ரன் ரேட் அழுத்தத்தை அவர்கள் மீது வைத்ததன் மூலம் எங்களால் விக்கெட்டுகளைப் பெற முடிந்தது. இங்குள்ள சூழ்நிலைகளையும், எதிரணியையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இந்த வெற்றியின் மூலம் எங்கால் பேட்டிங் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், பந்துவீச்சில் எதிரணியை அழுத்ததிற்கு தள்ள முடியும் என்பதையும் உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News