வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியிந்தொடக்க வீரர்கள் சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த முகமது ஹாரிஸ் - கேப்டன் சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் முகமது ஹாரிஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சலமான் ஆகாவும் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 56 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹசன் நவாஸ் மற்றும் ஷதாப் கான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் நவாஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கானும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், மஹெதி ஹசன், ஹசன் மஹ்முத், தன்ஸிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் மற்றும் ஷமிம் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News