பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் அதிகபடியான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக முதல் செஷன் முழுவதும் டாஸ் போடப்படாமல் ஒத்திவைக்கபட்டிருந்தது. அதன்பின் உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்றைய தினமே அறிவிக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இரு அணிகளும் தங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை முன்னிலைப்படுத்தி பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளனர். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

அதன் களமிறங்கிய பாஅகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ஷொரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.

இதில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீப் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்முத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் கையிருப்பு இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியானது நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News