பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஆப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் அரைசதம் கடந்திருந்த சைம் அயூப் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் - முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது சதங்களையும் பதிவு செய்ததுடன் 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் விக்கெட்டை இழக்க, அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த முகமது ரிஸ்வான் 171 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

Advertisement

இதமூலம் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 16 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 53 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் இணைந்த ஷாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாத்மான் இஸ்லாம் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் ஷாத்மன் இஸ்லாம் 53 ரன்களுடனும், மொமினுல் ஹக் 45 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் குர்ராம் ஷஸாத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனையடுத்து 314 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News