Pakistan vs Bangladesh 2nd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

PAK vs BAN 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் -  ஆகஸ்ட் 30காலை 10.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

PAK vs BAN 2nd Test Pitch Report

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் 6 முறை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. அதேசமயம் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 338 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 401 ரன்களாக அதிகரிக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 657 ரன்கள் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோராக இன்றுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PAK vs BAN 2nd Test: Where to Watch?

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் ஒளிப்பரப்பு செய்யவில்லை. மேற்கொண்டு, எந்தவொரு ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

PAK vs BAN Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 14
  • பாகிஸ்தான் - 12
  • வங்கதேசம் - 01
  • முடிவில்லை - 01

Pakistan vs Bangladesh 2nd Test Probable Playing XI

பாகிஸ்தான் உத்தேச லெவன்: அப்துல்லா ஷபீக், சைம் அயூப், ஷான் மசூத் (கே), பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், முகமது அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது, குர்ரம் ஷஸாத்

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன் : ஷாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்ஃபிகூர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ரானா.

PAK vs BAN 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆசாம் (கேப்டன்), முஷ்ஃபிக்கூர் ரஹிம், சௌத் ஷகீல்
  • ஆல்ரவுண்டர் - ஷாகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), ஆகா சல்மான், மெஹ்தி ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - ஷொரிஃபுல் இஸ்லாம், நசீம் ஷா, அப்ரார் அஹ்மத்

PAK vs BAN 2nd Test Dream11 Prediction,PAK vs BAN Dream11 Prediction, Today Match PAK vs BAN, PAK vs BAN Test Series, PAK vs BAN Dream11 Team, Fantasy  Cricket Tips, PAK vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Bangladesh Tour of Pakistan, Injury Update of the match between Pakistan vs Bangladesh

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News