பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலிவுடன் இணைந்து கேப்டன் ஒல்லி போப் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இப்போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார். இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் டக்கெட் வழக்கம் போல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், அதிரடியாக விளையாடிய டக்கெட்டும் தனது அரைசத்தைப் பூர்த்தி செய்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ருட் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களையும், அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 11 பவுண்டரிகளுடன் 80 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 324 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News