PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மேத்யூ மோட்ஸ் ஆகியோரும், பாகிஸ்தான் அணியில் காம்ரன் குலாம், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் ரன்களைச் சேர்த்து அணியை முன்னிலைப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின்னர் இருவரும் இணைந்த் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதன் காரணமாக இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சைம் அயூப் 40 ரன்களுடனும், காம்ரன் குலாம் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக் லீச் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து 8 விக்கெட்டுகளை கைவசம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.