PAK vs ENG, 3rd T20I: ப்ரூக், டக்கெட் அதிரடி; பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

Updated: Fri, Sep 23 2022 23:36 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வாருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமனிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 8 ரன்னிலு, டேவிட் மாலன் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்து அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களையும், ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஹைதர் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய ஷான் மசூத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷான் மசூத் 66 ரன்களைச் சேர்த்திருந்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலையும் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை