PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!

Updated: Tue, Jan 03 2023 18:10 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. 

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 71 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லேதம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். மேலும் இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் சர்வதேச சதமாகவும் இது அமைந்தது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டிலும் முதல் சதத்தைப் பதிவுசெய்த வீரர் எனும் பெருமையையும் டெவான் கான்வே பெற்றிருந்தார்.

அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 122 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறிவினர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாம் பிளெண்டல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் பிளெண்டல் அரைசதம் கடக்க, இஷ் சோதி 11 ரன்களோடு வெளியேறினார்.

பின் 51 ரன்களைச் சேர்த்த பிளெண்டலும் ஆட்டமிழக்க, 345 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மேட் ஹென்றி - அஜாஸ் படேல் இணை அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணரவைத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேட் ஹென்றி அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.இறுதியில் அஜாஸ் படேல் 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 449 ரன்காளுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 20, கேப்டன் பாபர் ஆசாம் 24 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து, 154 ரன்களைச் சேர்த்தது. இதில் இமாம் உல் ஹக் 74 ரன்களுடனும், சௌத் சகீல் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, அஜாஸ் படேல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை