டி20 உலகக்கோப்பை: 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் பாபர் ஆசம் தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் மூத்த வீரர் சோயப் மாலிக் இடம்பெறவுள்ளது.
அதேசமயம் ஆசிஃப் அலி, குஷ்டில் ஷா ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் ஃபகர் ஸமான், ஷான்நவாஸ் தஹானி, உஸ்மான் காதிர் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதே அணியே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசம் (கே),ஷதாப் கான் (விசி), ஆசிஃப் அலி, ஆஸம் கான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி, சோகைப் மக்சூத்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ரிசர்வ் வீரர்கள்: ஃபகர் ஸமான், ஷான்நவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்