ZIM vs PAK, 1st T20I: சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை இழந்துள்ள ஜிம்பாப்வே அணி இத்தொடரில் அதற்கான பதிலடியை இத்தொடரில் கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அதேசமயம் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா செயல்படவுள்ளார். ஏனெனில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, சல்மான் அலி அகா கேப்டனாக செயல்படவுள்ளார். அதேசமயம் ரிஸ்வான் இல்லாத காரணத்தால் அணியின் தொடக்க வீரராக சைம் அயூப்பும், அணியின் விக்கெட் கீப்பராக உஸ்மான் கானும் செயல்படவுள்ளனர்.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் தயாப் தாஹிர் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு அணியின் ஃபினிஷர்களாக முகமது இர்ஃபான் கான் மற்றும் ஜஹந்தத் கான் ஆகியோர் செயல்படவுள்ளனர். இவர்களைத் தவிர்த்து அணியின் பந்துவீச்சு துறையை ஹாரிஸ் ராவுஃப் வழிநடத்தவுள்ளார். அவருக்கு துணையாக அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் மற்றும் சுஃபியான் முகீம் ஆகியோருக்கும் இந்த அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சல்மான் அலி அகா (கேப்டன்), சைம் அயூப், உமைர் பின் யூசுப், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), தயாப் தாஹிர், முகமது இர்பான் கான், ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத், சுஃஃபியான் முகீம்.