ZIM vs PAK, 2nd T20I: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும்.
அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணி இப்போட்டில் விளையாடும். இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணி இப்போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஒமைர் யூசுஃப், சைம் அயூப் அதிரடியாக தொடங்கிய நிலையிலும் அவர்களால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். மேற்கொண்டு அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் சோபிக்க தவறினார். இருப்பினும் உஸ்மான் கான், தயாப் தஹிர் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவர்கள் தவிர்த்து இர்ஃபான் கான் மற்றும் ஜஹாந்தத் கான் உள்ளிட்டோர் ஃபினிஷிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கியுள்ளது. அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஹாரிஸ் ராவுஃப், சுஃபியான் முகீம் மற்றும் அப்ரார் அஹ்மத் ஆகியோர் எதிரணி பேட்டர்களை அழுத்ததில் வைத்துள்ளனர். அவர்களுடன் அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹாந்தத் கான் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் இப்போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறுவது உறுதி.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், உமைர் யூசுப், உஸ்மான் கான், சல்மான் ஆகா (கே), தயாப் தாஹிர், இர்பான் கான், ஜஹந்தத் கான், அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், சுஃபியான் முகீம்