ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தான் பிளேயிங் லெவன்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Thu, Dec 05 2024 09:01 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.  

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அதேசமயம் ஒயிட்வாஷை தவிர்ப்பதுடன், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணியும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயூபிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாஹிப்சாதா ஃபர்ஹான் தொடக்க வீரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இர்ஃபான் கான், அப்ராஸ் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கும் இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காசிம் அக்ரம், அராஃபத் மின்ஹாஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இதுதவிர்த்து உஸ்மான் கான், தயாப் தாஹீர், ஜஹந்தத் கான், அப்பாஸ் அஃப்ரிடி மற்றும் சுஃபியான் முகீம் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். ஏற்கெனவே பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்றதாலும், அடுத்ததாக தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாட வேண்டிய காரணத்தாலும் இப்போட்டியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், உமைர் பின் யூசுப், உஸ்மான் கான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), தயப் தாஹிர், காசிம் அக்ரம், அராபத் மின்ஹாஸ், ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், சுஃபியான் முகீம். .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை