Sufiyan muqeem
SA vs PAK, 3rd ODI: சைம் அயூப் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்திருந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Sufiyan muqeem
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தான் பிளேயிங் லெவன்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை சுஃபியான் முகீம்ம் சமன் செய்தார். ...
-
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs PAK, 2nd T20I: சுஃபியான் முகீம் சுழலில் 57 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs PAK, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அபிஷேக் சர்மாவை சீண்டிய சுஃபியான் முகீம்-வைரலாகும் காணொளி!
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தின் போது இந்திய வீரர் அபிஷேக் சர்மா மற்றும் பாகிஸ்தானின் சுஃபியான் முகீம் இடையேயான வார்த்தை மோதல் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24