ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!

Updated: Fri, Dec 30 2022 09:46 IST
Image Source: Google

டி 20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற்றதால் பல்வேறு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டை கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக இந்திய அணி மிகவும் குறைவான அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான்கில், இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் சாதனை படைத்தார்கள். ஆனால் அதில் ஒருவரை கூட ஐசிசி பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம். ஒன்பது போட்டிகளில் விளையாடி 679 ரன்களை அவர் அடித்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாபர் அசாம் தான் வென்றார். இதனால் அதே சாதனையை மீண்டும் அவர் செய்வாரா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.ஜூலை 2021 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் தான் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

நடப்பாண்டில் மட்டும் பாபர் அசாம் எட்டு அரைசதமும், மூன்று சதமும் அடித்திருக்கிறார். நடப்பாண்டில் பாபர் அஸாம் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி எட்டு ஆட்டங்களில் வென்றிருக்கிறார். குறிப்பாக நடப்பாண்டில் 73 பந்துகளில் பாபர் அசாம் சதம் விளாசினார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பவர் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா. 12 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டும் இதே போன்ற 30 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் விளையாடிய 12 போட்டிகளில் 9 ஆட்டங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமே இல்லாத ஆஸ்திரேலியா மைதானங்களில் தான் நடைபெற்றது. சாம்பா அபார பந்துவீச்சால் 196 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாத நியூசிலாந்து அணி 82 ரன்கள் சுருண்டது. இதில் ஆடம் சம்பா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். சிக்கந்தர் ராசா 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 645 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதமும் மூன்று சதமும் அடங்கும். இதில் இந்தியாவுக்கு எதிராக சிக்கந்தர் ராசா சதம் அடித்தார். இதேபோன்று பந்துவீச்சிலும் சிக்கந்தர் ராசா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சிறந்த t20 வீரர்களுக்கான போட்டியிலும் சிக்கந்தர் ராசா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப். 21 போட்டியில் விளையாடி 709 ரகளை சாய் ஹோப் அடித்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சாய் ஹோப் படைத்து வருகிறார். சாய் ஹோப்க்கு இந்த ஆண்டில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் பிற்பகுதியில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பாண்டில் சாய் ஹோப் மூன்று சதங்களும், இரண்டு அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை