இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!

Updated: Fri, Jul 05 2024 12:39 IST
Image Source: Google

நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தொடர்களுக்காக தயாராகி வருகின்றது. 

அந்தவகையில் அந்த அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடாவுள்ளது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. முன்னதாக அந்த அணி கடந்த 2020-21இல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அதன்பின் தற்போது தான் மீண்டும் அங்கு பயணிக்கவுள்ளது. 

மேற்கொண்டு அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், அத்தொடருக்கான முன்னோட்டமாக பாகிஸ்தான் அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையானது கிழே குறிப்பிடத்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணி அட்டவணை

பாகிஸ்தான் vs வங்கதேசம்

  • முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 21 to 25 - ராவல்பிண்டி
  • இரண்டாவது டெஸ்ட் - ஆகஸ்ட் 30 to செப்டம்பர் 03 - கராச்சி 

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

  • முதல் டெஸ்ட் - அக்டோபர் 07 to 11 - முல்தான்
  • இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 15 to 19 - கராச்சி
  • மூன்றாவது டெஸ்ட் - அக்டோபர் 24 to 28 - ராவல்பிண்டி

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்

  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 04 - மெல்போர்ன்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 08 - அடிலெய்ட்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 10 - பெர்த்
  • முதல் டி20 போட்டி - நவம்பர் 14 - பிரிஸ்பேன்
  • இரண்டாவது டி20 போட்டி - நவம்பர் 16 - சிட்னி
  • மூன்றாவது டி20 போட்டி - நவம்பர் 18 - ஹாபர்ட்

ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்

  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 24 - புலவாயோ
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 26 - புலவாயோ
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 28 - புலவாயோ
  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 01 - புலவாயோ
  • இரண்டாவது டி20 போட்டி - டிசம்பர் 03 - புலவாயோ
  • மூன்றாவது டி20 போட்டி - டிசம்பர் 05 - புலவாயோ

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்

  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 10 - டர்பன்
  • இரண்டாவது டி20 போட்டி - டிசம்பர் 13 - செஞ்சூரியன்
  • மூன்றாவது டி20 போட்டி - டிசம்பர் 14 - ஜொஹன்னஸ்பர்க்
  • முதல் ஒருநாள் போட்டி - டிசம்பர் 17 - பார்ல்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 19 - செஞ்சூரியன்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 22 - ஜொஹன்னஸ்பர்க்
  • முதல் டெஸ்ஸ்ட் - டிசம்பர் 26 to 30 - செஞ்சூரியன்
  • இரண்டாவது டெஸ்ட் - ஜனவரி 03 to 07 -  கேப் டவுன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை