PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இட்தொடருக்கான முழு அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜவரி 6ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேறவுள்ளது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது ஜனவரி10 தேதி ராவல்பிண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜனவரி 16அம் தேதி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்திலும், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 24ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் அமீர் ஜாங்குவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர்த்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டியும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணியின் கேப்டனாக இமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் அகமது பஷீர், அகமது பஷீர், முகமது ஹுரைரா உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி: இமாம்-உல்-ஹக் (கேப்டன்), அகமது பஷீர், அகமது சஃபி அப்துல்லா, அலி ஜரியாப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், காஷிப் அலி, முகமது ஹுரைரா, முகமது ரமீஸ் ஜூனியர், முகமது சுலேமான், மூசா கான், உமைர் பின் யூசுப், ரோஹைல் நசீர் மற்றும் சாத் கான்
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், கெவின் சின்க்ளேர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்