பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Sep 21 2022 19:33 IST
Pakistan Vs England, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips and Probable 11 (Image Source: Google)

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.

அந்த வகையில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி கராச்சியில் நாளை இரவு நடைபெறுகிறது.


போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  •     இடம் - கராச்சி கிரிக்கெட் மைதானம்
  •     நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் இங்கிலாந்து அணி முதல் டி20 போட்டியில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

அதிலும் மூன்றாண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் தனது கம்பேக் ஆட்டத்திலேயே அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றிக்கு உதவியது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 போட்டிகளில் விளையாடமாட்டார் . அவருக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மொயீன் அலி சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளதும் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

அதேசமயம் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி, முதல் டி20 போட்டியில் தோல்வி என அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. 

அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக முகமது ரிஸ்வான் மட்டுமே அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

மேலும் முதல் போட்டியில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 19
  •     பாகிஸ்தான் - 05
  •     இங்கிலாந்து - 13
  •     முடிவில்லை - 1

உத்தேச அணி 

பாகிஸ்தான் - பாபர் ஆசாம்(கே), முகமது ரிஸ்வான், ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி
    
இங்கிலாந்து - அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி(கே), சாம் கர்ரன், டேவிட் வில்லி, லூக் வூட், ஆதில் ரஷித், ரிச்சர்ட் க்ளீசன்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  •      பேட்டர்ஸ் - பாபர் அசாம், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், ஹாரி புரூக்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஷதாப் கான், மொயீன் அலி, முகமது நவாஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - லூக் வூட், ஹாரிஸ் ரவுஃப், அடில் ரஷித்
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை