டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெர்த்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.  

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து இரு அணிகளுடனும் தோல்வியைத் தழுவியுள்ளது அந்த அணிக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

அதிலும் அணியின் தொடக்கவீரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பியுள்ளது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து அந்த அணியின் ஃபீல்டிங் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் அந்த அணி அடுத்தடுத்து கேட்சுகளை தவறவிடுவதும், பீல்டிங்கை தவறவிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. அதனை சரிசெய்யும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மறுமுனையில் உள்ள நெதர்லாந்து அணி குருப் ஸ்டேஜ் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், பாஸ் டி லீட், டாம் கூப்பர், விக்ரம்ஜித் சிங் ஆகியோரும் பந்துவீச்சில் டிம் பிரிங்கில், பான் வான் மீகெரென் ஆகியோரையும் சார்ந்துள்ளது.

அவர்களைத் தாண்டி மற்ற வீரர்களும் சோபிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு மற்றொரு அதிர்ச்சியையும் நெதர்லாந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நெதர்லாந்து
  • இடம் - பெர்த் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 1
  • பாகிஸ்தான் - 1
  • நெதர்லாந்து - 0

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான், ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்டிங்: பாபர் அசாம், ஷான் மசூத், மேக்ஸ் ஓ'டவுட்
  • ஆல்ரவுண்டர்: பாஸ் டி லீடே, முகமது நவாஸ், ஷதாப் கான்
  • பந்துவீச்சு: ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, டிம் பிரிங்கிள்/பால் வான் மீகெரென்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News