என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு செயல்பாட்டுகளின் அடிப்படையில் மேலும் கீழும் ஆகவே பாபர் ஆசாம் தலைமையில் அமைந்திருக்கிறது. இதில் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.
அதே சமயத்தில் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் மிக மோசமாக விளையாடினாலும், தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்பாராத தோல்வியின் காரணமாக அரையிறுதி வாய்ப்பை எட்டி இறுதிப்போட்டிக்கும் முன்னேறி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் அனுபவம் குறைவான இலங்கை அணியிடம் தோற்றுக் கோப்பையை இழந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் நடுவில் விளையாடும் வாய்ப்பை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ஹாரிஸ் பெற்றார். அவர் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் பாகிஸ்தான் அணியில் அவரால் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. 14 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாட வாய்ப்பு பெற்ற அவரால் ஒரு அரைசதத்தைக் கூட தனது கணக்கில் சேர்க்க முடியவில்லை.
இதுகுறித்து பேசிய முகமது ஹாரிஸ் “நான் மூன்று வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதை விரும்புகிறேன். என்னுடைய அதிரடியான பேட்டிங் ஸ்டைல் டி20 கிரிக்கெட் மட்டுமே ஆனது அல்ல. இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாகத்தான் விளையாடினார்கள். என்னால் அதிரடியாக பவுண்டரி சிக்ஸர்கள் அடிக்க முடிந்தாலும், நான் என்னுடைய ஆட்டத்தில் சிங்கிள் மற்றும் 2 ரன்களை சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.