IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!

Updated: Tue, Jul 06 2021 14:00 IST
Image Source: Google

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.

இலங்கையுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இலங்கைக்கு 2ஆம் தர இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கடுமையன விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அர்ஜுன ரணதுங்காவின் கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய தனேஷ் கனேரியா, “ இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா தனது 'பி' அணியை அனுப்பியுள்ளது என்று ரணதுங்க கூறுகிறார். அவர் என்ன பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. 1996 உலகக் கோப்பை வென்ற கேப்டன், உலக கிரிக்கெட்டில் ஒரு பெரிய பெயரை உடையவர் இக்கருத்தை தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

இந்தியாவில் சுமார் 50-60 சர்வதேச வீரர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு இரண்டு சர்வதேச அணிகளை உருவாக்க முடியும்.

மேலும் தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டிய என பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதனால் ரணதுங்காவின் கருத்தைக் கேட்க வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::