சதமடித்து சாதனைகள் படைத்த பர்வேஸ் ஹொசைன் எமான்!

Updated: Sun, May 18 2025 12:29 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் சதமாடித்து அசத்திய கையோடு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதள்வில் ரன்களைச் சேர்க்காத நிலையிலும், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஜவதுல்லா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணியில் கேப்டன் முகமது வசீம் 54 ரன்களையும், ஆசிஃப் கான் 42 ரன்களையும், ராகுல் சோப்ரா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.  இதனால் யுஏஇ அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் எமான் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் பர்வேஸ் ஹொசைன் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இரண்டாவது வங்கதேச வீரர் எனும் பெருமயைப் பெற்றுள்ளார். முன்னதாக வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் கடந்த 2016 டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிராக சதமடித்து அசத்தியிருந்தார். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து இப்போட்டியில் பர்வேஸ் ஹொசைன் 9 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னாதாக வங்கதேச அணியின் ரிஷாத் ஹொசைன் கடந்தாண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஆதனை தற்போது பர்வேஸ் ஹொசைன் முறியடித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை