சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

Updated: Sun, Jun 23 2024 08:30 IST
Image Source: Google

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த நடத்திர வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இன்று வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இன்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த பாட் கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் பாட் கம்மின்ஸ் வீழ்த்தும் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டாகவும் இது அமைந்தது. 

முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திலும் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன்படி இன்றைய போட்டியின் 18ஆவது ஓவரை வீசிய கம்மின்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கானின் விக்கெட்டையும், அதன்பின் இன்னிங்ஸின் 20ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் கரிம் ஜனத் மற்றும் குல்பதின் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் எனும் வரலாற்று சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றிலும் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளது. 

மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையையும் பாட் கம்மின்ஸ் தன்வசப்படுத்தியுள்ளார். மேலும் உலகளவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையையும் கம்மின்ஸ் பெற்றுள்ளார். முன்னதாக லசித் மலிங்க, டிம் சௌதீ, வசீம் அப்பாஸ் ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இன்று நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் அடி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 32 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை