வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும் - பாட் கம்மின்ஸ் புகழாரம்!

Updated: Mon, Dec 18 2023 21:48 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடியது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்து பாகிஸ்தானுக்கு 450 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நாதன் லையன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்த்ள்ளார். அதன்படி இப்போட்டியில் பஹீம் அஸ்ரஃப் விக்கெட்டினை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை அடுத்து அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் 36 வயதான நேதன் லயன். 

இந்நிலையில் நாதன் லையன்  குறித்த் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “ஷேன் வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் விளையாட முடியும். ஆண்டுக்கு 10 போட்டிகள் என்றாலும் 40-50 போட்டிகள் அவரால் விளையாட முடியும். சராசரியாக ஒரு போட்டிக்கு 4-5 விக்கெட்டுகள் எடுத்தாலும் இன்னும் சில நூறு விக்கெட்டுகள் எடுக்கலாம். அப்படி பார்த்தால் 700 வந்துவிடுமே” எனக் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை