எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, Dec 30 2024 08:27 IST
Image Source: Google

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. 

அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. 

இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி  ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கைப்பற்றியதன் மூலம் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை கேப்டனாக இருந்து எதிரணி அணியின் கேப்டனை வெளியேற்றிய சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய அணி கேப்டனாக பாட் கம்மின்ஸ் 6ஆவது முறையாக வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்தின் டெட் டெக்ஸ்டரை ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனாடும், இந்தியாவின் சுனில் கவாஸ்கரை பாகிஸ்தானின் இம்ரான் கானும் தலா 5 முறை வீழ்த்தியுள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை நான்காவது முறையாக பாட் கம்மின்ஸ் கைப்பற்றியுள்ளார். இதில் ரோஹித் சர்மா இத்தொடரில் கம்மின்ஸுக்கு எதிராக 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் பாட் கம்மின்ஸுக்கு எதிராக ரோஹித் சர்மா 8 முறை தனது விக்கெட்டி இழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை