NZ vs AUS, 1st Test: நாதன் லையனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!

Updated: Sun, Mar 03 2024 13:26 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 28ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 174 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 174 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களைச் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் பின் தங்கியது. 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி கிளென் பிலிப்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 370 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில்196 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “கேமரூன் க்ரீன் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் உண்மையிலேயே மிகச்சிறப்பாக இருப்பது. அவரது ஆட்டம் முதல் நாளில் நாங்கள் சரிவை சந்தித்த போதும், நியூசிலாந்து அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது என நினைத்தேன்.

மேலும் இந்த பிட்சானது நான் விளையாடிய மைதாங்னங்களை காட்டிலும் அதிகளவு பவுன்ஸ் கொண்டதாக அமைந்தது. ஆனாலும் இங்கு பந்து சுழலவும் செய்ததால் எங்களு வசதியாக மாறியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்கள் அணியில் நாதன் லையன் இருந்ததால் இப்போட்டியின் வெற்றியும் எளிதாக அமைந்துவிட்டது. அவர் எங்கள் அணியில் இருப்பது எப்போது எங்களுக்கு மிகப்பெரும் பலம் தான்” என்று பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை