காயத்தை சந்தித்த கலீல் அஹ்மத்; யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!

Updated: Wed, Nov 20 2024 22:32 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. 

தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாமி அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் ரிஸர்வ் வீரர்களாக முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது காயம் காரணமாக அவரால் பயிற்சியின் போது பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டதுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக கலீல் அஹ்மத் மருத்துவ சிகிச்சைக்காக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், காயம் காரணமாக கலீல் அஹ்மத் நாடு திரும்பிய நிலையில் மாற்று வீரராக யாஷ் தயாள் இந்திய அணியின் ரிஸர்வ் வீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் யாஷ் தயாள் இடம்பிடித்திருந்தாலும், விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

ரிஸர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை