புஜாரா இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜோஷ் ஹேசில்வுட்!
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்ணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேலும் கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இம்முறையாவது வெற்றியைப் பதிவுசெய்வதுடன் மீண்டும் இத்தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைப்பட்ட நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா இன்றி இத்தொடரி இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏனெனில் கடந்த் இரண்டு முறையிலும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றதில் புஜாராவிற்கு தனி இடம் உள்ளது. ஆனால் சமீப காலங்களில் வயது மூப்பு மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் சட்டேஷ்வர் புஜாரா ஓரங்கட்டப்பட்டார்.
இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் சிறப்பாக செயல்பட்ட சமயத்திலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் புஜாராவின் எதிர்காலமும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வீரராக இடம் பிடிக்காத புஜாரா, இந்த தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாரா இல்லாததால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சட்டேஷ்வர் புஜாரா இங்கு இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நீண்ட பேட் செய்து, ஒவ்வொரு முறையும் அவரது விக்கெட்டை கைப்பற்ற மிகவும் அழுத்ததை கொடுத்துள்ளார்.
கடந்த சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியாவில் அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அணியில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. பிளேயிங் லெவனில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் நல்ல வீரர்களே. புஜாராவுக்கு அடுத்து ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிஷப் பந்துக்கு எதிராக பந்துவீச உங்களிடம் பல திட்டங்கள் உங்கள் கைவசம் இருக்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் விராட் கோலி மட்டுமின்றி, எங்கள் கவனம் அனைத்து வீரர்களின் மீதும் உள்ளது. அவர்கள் கடந்த காலங்களில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். நிச்சயமாக அவர்களின் விக்கெட்டும் முக்கியமானதாக இருக்கும். அதேசமயம் எங்கள் பக்கமும் போட்டியை விரைவாக மாற்றும் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.