ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது நேற்றைய தினம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். முன்னதாக அவரை அணியிலிருந்து விடுவித்த கொல்கத்தா அணியே, தற்போது ஏலத்தில் போட்டி போட்டு அவரை மீண்டும் வாங்கியிருக்கிறது. மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீர்ரகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பா் கிங்ஸ்
நூா் அகமது (ஆஃப்கானிஸ்தான்) ரூ.10 கோடி, ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடி, டெவான் கான்வே (நியூஸிலாந்து) ரூ.6.25 கோடி, கலீல் அகமது ரூ.4.80 கோடி, ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து) ரூ.4 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி, விஜய் சங்கா் ரூ.1.20 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ்
கேஎல் ராகுல் ரூ.14 கோடி, மிட்செல் ஸ்டாா்க் (ஆஸ்திரேலியா) ரூ.11.75 கோடி, நடராஜன் ரூ.10.75 கோடி, ஜேக் ஃபிரேசா் மெக்குர்க் (ஆஸ்திரேலியா) ரூ.9 கோடி, ஹேரி புரூக் (இங்கிலாந்து) ரூ.6.25 கோடி, சமீா் ரிஸ்வி ரூ.95 லட்சம், கருன் நாயா் ரூ.50 லட்சம், அஷுதோஷ் சர்மா ரூ.3.80 கோடி மற்றும் மோஹித் சர்மா ரூ.2.20 கோடி
குஜராத் டைட்டன்ஸ்
ஜாஸ் பட்லா் (இங்கிலாந்து) ரூ.15.75 கோடி, முகமது சிராஜ் ரூ.12.25 கோடி, ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) ரூ.10.75 கோடி, பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி, மஹிபால் ரோம்ரோா் ரூ.1.70 கோடி, குஷால் குஷக்ரா ரூ. 65 கோடி, அனுஜ் ராவத், மனவ் சுதர் மற்றும் நிஷாந்த் சிந்து ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடா்ஸ்
வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடி, ஆன்ரிச் நோர்ட்ஜே (தென் ப்பிரிக்கா) ரூ.6.50 கோடி, குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ரூ.3.60 கோடி, ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஆஃப்கானிஸ்தான்) ரூ.2 கோடி, அங்கிரிஷ் ரகுவன்ஷி ரூ.3 கோடி, வைபவ் அரோரா ரூ.1.80 கோடி மற்றும் மயங்க் மார்கண்டே ரூ.30 லட்சம்.
லன்னோ சூப்பா் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஆவேஷ் கான் ரூ.9.75 கோடி, டேவிட் மில்லா் (தென் ஆப்பிரிக்கா) ரூ.7.50 கோடி, அப்துல் சமத் ரூ.4.20 கோடி, மிட்செல் மாா்ஷ் (ஆஸ்திரேலியா) ரூ.3.40 கோடி, ஐடன் மாா்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) ரூ.2 கோடி, ஆர்யன் ஜூரல் ரூ.30 லட்சம்
மும்பை இண்டியன்ஸ்
டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து) ரூ.12.50 கோடி, நமன் திா் ரூ.5.25 கோடி, ராபின் மின்ஸ் ரூ.65 லட்சம், கரண் சர்ம் ரூ.50 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயா் ரூ.26.75 கோடி, யுஸ்வேந்திர சஹல் ரூ.18 கோடி, அா்ஷ்தீப் சிங் ரூ.18 கோடி, மாா்கஸ் ஸ்டெய்னிஸ் (ஆஸ்திரேலியா) ரூ.11 கோடி, நெஹல் வதேரா ரூ.4.20 கோடி, கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) ரூ.4.20 கோடி, ஹர்பிரீத் பிரார் ரூ.1.50 கோடி, விஷ்னு வினோத் ரூ.95 லட்சம், வைஷாக் விஜயகுமார் ரூ.1.80 கோடி மற்றும் யாஷ் தாக்கூர் ரூ.1.80 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோஃப்ரா ஆா்ச்சா் (இங்கிலாந்து) ரூ.12.50 கோடி, வனிந்து ஹசரங்கா (இலங்கை) ரூ.5.25 கோடி, மஹீஷ் தீக்ஷனா (இலங்கை) ரூ.4.40 கோடி, ஆகாஷ் மத்வால் ரூ.1.20 கோடி, குமார் கார்த்திகேயா ரூ.30 லட்சம்.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு
ஜோஷ் ஹேஸில்வுட் (ஆஸ்திரேலியா) ரூ.12.50 கோடி, ஃபில் சால்ட் (இங்கிலாந்து) ரூ.11.50 கோடி, ஜித்தேஷ் சர்மா ரூ.11 கோடி, லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.8.75 கோடி, ரஷிக் சலாம் ரூ.6 கோடி , சூயாஷ் சர்மா ரூ.2.60 கோடி
சன்ரைசா்ஸ் ஹைதராபாத்
Also Read: Funding To Save Test Cricket
இஷான் கிஷண் ரூ.11.25 கோடி, முகமது ஷமி ரூ.10 கோடி, ஹா்ஷல் படேல் ரூ.8 கோடி, அபினவ் மனோஹா் ரூ.3.20 கோடி, ராகுல் சஹா் ரூ.3.20 கோடி, ,ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா) ரூ.2.40 கோடி, ராகுல் சஹார் ரூ.3.20 கோடி, அதா்வா டைட் ரூ.30 லட்சம், சிமர்ஜித் சிங் ரூ.1.5 கோடி