ராகுலை க்ளீன் போல்டாக்கிய பாட் கம்மின்ஸ் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையெயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அதேசமயம் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களையும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்துபெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். அதிலும் பொறுப்புட விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட கேல் ராகுல் பந்தை சரியாக கணிக்க தவறி பந்தை தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் 24 ரன்களை மட்டுமெ எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.